RRR Others USA

"இனி Ring-க்குள்ள கால் வெக்கமாட்டேன்".. பிரபல WWE வீரர் பரபரப்பு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல WWE வீரரான டிரிபிள் எச் (Triple H) ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

"இனி Ring-க்குள்ள கால் வெக்கமாட்டேன்".. பிரபல WWE வீரர் பரபரப்பு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Triple H

WWE போட்டிகளுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் பங்குபெறும் வீரர்களுக்கு தனித்தனியாக ரசிகர்கள் படை இருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான WWE ரசிகர்களுக்கு ஆஸ்தான ஹீரோவாக திகழ்ந்தவர் Triple H. 1992 ஆம் ஆண்டு WWE  போட்டிகளில் கால் பதித்த இவர் இதுவரையில் 14 முறை வேர்ல்டு சேம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றிருக்கிறார்.

90's கிட்ஸ்களின் WWE ஹீரோவாக வலம்வந்த இவர் 1997 ஆம் ஆண்டு ஷான் மைக்கில்ஸ் -உடன் இணைந்து D-Generation Xஐ துவங்கினார். இந்த இணையை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனச் சொல்லிவிடலாம். ரிங்கில் இவர்களது ஸ்டைலும் ஆட்டத்தை கணநேரத்தில் மாற்றும் திறனும் பல்வேறு தரப்பு மக்களை இவர்கள் பக்கம் இழுத்தது.

 WWE Wrestler Triple H announces retirement fans in shock

இதய நோய்

இந்நிலையில், 52 வயதான Triple H, WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர்,"எனக்கு வைரஸ் நிமோனியா இருந்தது. என் நுரையீரல் வீக்கமடைந்தது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, நான் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அது மேலும் மோசமாகியது. நான் இருமும் போது என்னுடைய உடைகளில் இரத்தம் இருப்பதை எனது மனைவி கவனித்திருக்கிறார். அதன்பிறகு நான் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே EKG மற்றும் எக்கோ மற்றும் பல சோதனைகளை செய்தார்கள். என்னுடைய இதயம் பலவீனமாக இருப்பதை நான் தெரிந்துகொண்டேன்" என்றார்.

மேலும் இதுகுறித்து பேசுகையில்," சராசரியாக  Heart Ejection Fraction 55-60 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு 30 சதவீதம் தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு அது 22 ஆக குறைந்தது. ஆகவே இனி நான் ஒருபோதும் WWE போட்டிகளில் விளையாட மாட்டேன்" எனத் தெரிவித்தார்.

 WWE Wrestler Triple H announces retirement fans in shock

பிரபல வீரராக வலம்வந்த Triple H, WWEபோட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தை முன்னிட்டு WWE நிர்வாகம், சக வீரர்கள் அவரின் சாதனையை நினைவுகூரும் வகையில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

WWE, TRIPLEH, WRESTLING, டிரிபிள்எச், மல்யுத்தம்

மற்ற செய்திகள்