அவர் மட்டும் இல்லனா... இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் final-க்கே வந்திருக்காது!.. கோலி கண்டெடுத்த இளம் talent!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு ஒரு வீரர் மட்டுமே முக்கிய காரணம் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார்.

அவர் மட்டும் இல்லனா... இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் final-க்கே வந்திருக்காது!.. கோலி கண்டெடுத்த இளம் talent!

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி கடந்த சில வருடங்களாக மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் ஃபுல் ஃபார்மில் உள்ளனர்.

கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்கள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும். இந்த தொடர்களில் இந்திய அணி வெற்றிப்பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் என்ற நிலை இருந்த சூழலில் இளம் வீரர்கள் அதனை நிறைவேற்றிக் கொடுத்தனர். 

இந்நிலையில், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை வர இளம் வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே முக்கிய காரணம் என முன்னாள் வீரர் சாபா கரீம் பேசியுள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாது இருந்த பண்ட், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெற்றுக்கொடுத்தார். 

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 274 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 68.50 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 270 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். 

இதுகுறித்து பேசிய சாபா கரீம், இங்கிலாந்து அணியை வீழ்த்திய பிறகு நடக்கவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட்-ன் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் யார் என என்னைக்கேட்டால் ஒட்டுமொத்த இந்திய அணியில் ரிஷப் பண்ட்-ஐ மட்டுமே கூறுவேன். ஒரு விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டார். 

இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் நுழைந்ததில் இருந்து அணியின் ப்ளேயிங் 11 மிகவும் சிறப்பாக உள்ளது. பண்ட் 6வது இடத்தில் பேட்டிங்கிற்கு உள்ளார். அவர் எப்படியும் அவர் காப்பாற்றிவிடுவார் என்ற தைரியத்தில் தான் விராட் கோலி 5 பவுலர்களுடன் களமிறங்க தொடங்கினார். அத்தகைய சிறப்பான வீரர் ரிஷப் பண்ட் என புகழ்ந்துத்தள்ளியுள்ளார்.

 

மற்ற செய்திகள்