'அஷ்வின் இல்லாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்ல முடியாது'!.. ஏன் அவர் அவ்வளவு ஸ்பெஷல்?.. தெறி ரெக்கார்ட்ஸ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஷ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.

'அஷ்வின் இல்லாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்ல முடியாது'!.. ஏன் அவர் அவ்வளவு ஸ்பெஷல்?.. தெறி ரெக்கார்ட்ஸ்!!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ளது. இதற்காக அணி வியூகங்கள், பிட்ச் ரிப்போர்ட், வானிலை விவரங்கள் ஆகியவை தற்போது இருந்தே கணிக்கப்பட்டு வருகிறது.  

இங்கிலாந்து பிட்ச்சானது இந்திய களம் போன்று இல்லாமல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். இங்கு பந்தில் நல்ல வேகமும், ஸ்விங்கும் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் - பேட்ஸ்மேனுக்கும் இடையே கடும் போர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் கண்டிப்பாக சேர்க்கப்பட்டே ஆக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய பிட்ச்-களில் மட்டும் தான் சிறப்பாக செயல்படுகிறார். SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால், இந்த நாடுகளில் அஷ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. 

ஆனால், இங்கிலாந்து களத்தில் அஷ்வின் கண்டிப்பாக தேவைப்படுவார். அதற்கு காரணம் அவரின் அனுபவம். இடது கை வீரர்களுக்கு எதிராக அவர் படைத்திருக்கும் சாதனைகள் நியூசிலாந்து அணியை திணறடிக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை வைத்து பார்க்கும் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். எனவே, அஷ்வினின் ஸ்பின்னுக்கு இவர்கள் விழுந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். 

உலகில் இதுவரை இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனையே பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார் அஷ்வின். அவர் இதுவரை எடுத்துள்ள 409 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்களில் 207 விக்கெட்கள் இடது கை வீரர்களது ஆகும். அதே போல பேட்டிங் ஆர்டரில் டாப் 3 வீரர்களை விக்கெட் எடுப்பதில் அஷ்வின் கை தேர்ந்தவர். டாப் 3 வீரர்களில் மட்டும் இதுவரை 81 விக்கெட்களை எடுத்துள்ளார். அதுவும் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 52.2 ஆகும்.

அதன்படி பார்த்தால் நியூசிலாந்து அணியில் நியூசிலாந்து அணி ஓப்பனர்கள் டேவன் கான்வாய், டாம் லாந்தம் ஆகிய இருவருமே இடது கை வீரர்கள் தான்.  ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் 11ல் இடம் பெற்றால் நியூசிலாந்து அணியின் கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் அச்சுறுத்தல்களை சமாளிக்கலாம்.

இதுவரை கேன் ரிச்சர்ட்ஸனுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அஷ்வின் 4 முறை விக்கெட் எடுத்துள்ளார். அதே போல ராஸ் டெய்லரை 3 முறை விக்கெட் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் கண்டிப்பாக விராட் கோலி யோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்