‘ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சோதனை.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதமாகியுள்ளது.

‘ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சோதனை.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று (18.06.2021) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதும் இப்போட்டி, இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் திடீரென மழை குறிக்கிட்டதால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

WTC Final: Toss delayed due to rain in Southampton

டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறும் சவுத்தாம்ப்டனில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

WTC Final: Toss delayed due to rain in Southampton

அதனால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்பட மாட்டாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு பலத்த மழை பெய்யவில்லை. ஆனால் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. இது தொடரும் பட்சத்தில் இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்