'உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்'?.. 'இந்தியாவா?.. நியூசிலாந்தா'?.. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் ஓபன் டாக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து, பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது கருத்துகளையும், கணிப்புகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் குறித்து பெய்னிடம் கருத்து கேட்டதற்கு சிறிது கூட தயக்கம் இன்றி இந்திய அணி வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கிட்டத்தட்ட அவர்களது சிறப்பான ஆட்டத்தை நெருங்கிய படி விளையாடி விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எளிதில் வென்றுவிடும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்