'இங்கிலாந்தில் திடீரென கொளுத்தும் வெயில்!.. ப்ளானை மாற்றும் இந்திய அணி!.. அனல் பறக்கப் போகும் அஷ்வின் - ஜடேஜா கூட்டணி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் வானிலை மாறிவருவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வியூகங்கள் குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார்.

'இங்கிலாந்தில் திடீரென கொளுத்தும் வெயில்!.. ப்ளானை மாற்றும் இந்திய அணி!.. அனல் பறக்கப் போகும் அஷ்வின் - ஜடேஜா கூட்டணி'!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே தீவிரமாக தயாராகி வருகின்றன.  

இங்கிலாந்து களத்தில் பேட்டிங்கை விட பவுலிங் தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் கொடுக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியாவை போன்று இல்லாமல் பந்தில் நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைப்பது சந்தேகம் தான். 

இதற்கிடையே, வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை யார் யார் ப்ளேயிங் 11ல் இடம் பெறுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால், சுழற்பந்துவீச்சில் அஷ்வின் - ஜடேஜா ஜோடியை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் அவர்கள் இருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், இங்கிலாந்தின் வானிலையை பொறுத்தே இவர்களின் வாய்ப்புகள் உறுதியாகும். அங்கு தற்போது குளிர்காலமாக பார்க்கப்படுகிறது. எனவே பனிப்பொழிவு இருந்தால், பந்தில் டேர்னிங் இல்லாமல் ஸ்பின்னர்கள் சிரமப்படுவார்கள். 

இந்நிலையில், அஷ்வின் - ஜடேஜா கண்டிப்பாக விளையாடுவார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளராக கவாஸ்கர் செயல்படவுள்ளார். எனவே, போட்டி குறித்து பேசிய அவர், சவுத்தாம்ப்டனில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. எனவே, பிட்ச்சானது நன்கு வறண்டு சுழற்பந்துவீச்சுக்கு உதவும். இதனால் அஷ்வின் மற்றும் ஜடேஜா கண்டிப்பாக இந்திய அணியில் விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளார். 

ஜடேஜா மற்றும் அஷ்வின், பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் உதவக்கூடியவர்கள். கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இருவரின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. மேலும், இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஷ்வின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். நியூசிலாந்து அணியில் 3 வீரர்களுக்கு மேலாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்