'இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜா காரணமா'?.. மீண்டும் ஜடேஜாவை வம்பிழுத்த மஞ்சரேக்கர்!.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆடும் லெவனில் (Playing 11) ரவீந்திர ஜடேஜாவை சேர்த்தது மிகப் பெரிய தவறு என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இம்முறையும் விமர்சித்துள்ளார்.
ESPN Cricinfo இணையதளத்துக்கு பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், "சீதோஷன நிலை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி முதலிலேயே தவறு செய்துவிட்டது. மேலும், டாஸ் போடுவதற்கு ஒருநாள் தாமதமாகியும் அணியை மாற்றவில்லை. அதுமட்டுமின்றி, ரவீந்திர ஜடேஜாவை இவர்கள் இடக்கை சுழற்பந்துவீச்சுக்காக அணியில் எடுக்கவில்லை. அவரை பேட்டிங்கிற்காக எடுத்தார்கள், அதுதான் தோல்விக்கு காரணம். நான் எப்போதும் ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேனாக ஏற்க மறுக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அஸ்வினுக்கு பக்கபலமாக ஜடேஜா இருப்பார் என அவரை தேர்வு செய்யவில்லை. அவரை பேட்டிங்கிற்காக தேர்வு செய்துள்ளனர். அது எப்போதும் பலனளிக்காது. அந்த முடிவு அவர்களுக்கு எதிராகவே இப்போது அமைந்துவிட்டது. பேட்டிங் வேண்டுமென்றாலும் ஹனுமன் விஹாரியை எடுத்திருக்கலாம். அவர் நல்ல முறையில் பந்துகளை தடுத்து ஆடக் கூடியவர். அவர் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். நிச்சயமாக அப்படி செய்திருந்தால் இந்தியா கூடுதல் ரன்களை சேர்த்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்