'டெஸ்ட் சாம்பியன்ஷிப் final பக்கத்துல வந்துருச்சு'!.. சீக்கிரம் 'அந்த' தவறை திருத்துங்க கோலி'!.. முன்னாள் வீரர் கண்டுபிடித்த முக்கிய மிஸ்டேக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங்கில் ஒரு குறை இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

'டெஸ்ட் சாம்பியன்ஷிப் final பக்கத்துல வந்துருச்சு'!.. சீக்கிரம் 'அந்த' தவறை திருத்துங்க கோலி'!.. முன்னாள் வீரர் கண்டுபிடித்த முக்கிய மிஸ்டேக்!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர் நோக்கி காத்துள்ளனர்.

இந்திய - நியூசிலாந்து மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டியையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2019ல் தொடங்கப்பட்டது. அதையொட்டி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தனி விண்டோ (separate window) அமைக்க வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கோரியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக இந்த தொடர் நடைபெறுவதால் எந்த அணி யாரை எதிர் கொண்டது என்றே மறந்து விடுகின்றனர். இதனால், ஆறு மாதங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கென ஒதுக்க வேண்டும். அந்த காலக் கட்டத்தில் டி20, ஒருநாள் தொடர் என எதுவும் நடைபெறக் கூடாது. 

நீண்ட தொடராக இருந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் இந்திய அணி தான். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்ததால் தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இல்லையெனில், இந்த இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பே இருந்திருக்காது என தெரிவித்துள்ளார். 

விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசிய ரமீஸ், சில நேரங்களில் அதிகப்படியான யோசனைகளை செய்து தன்னை அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்கிறார். இதனால் சதம் அடிக்க முடியாமல் போகிறது. முதல் 20 - 25 ஓவர்களுக்கு நிதனமாக விளையாடினால் நிச்சயம் நல்ல ஸ்கோர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்