'இந்திய அணிய இதுக்கு மேல மோசமா கழுவி ஊத்த முடியாது'!.. வாய வச்சுட்டு சும்மா இல்லாம... ரசிகர்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிய வாகன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து தான் சாம்பியன் ஆக வேண்டிய அணி என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

'இந்திய அணிய இதுக்கு மேல மோசமா கழுவி ஊத்த முடியாது'!.. வாய வச்சுட்டு சும்மா இல்லாம... ரசிகர்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிய வாகன்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கியது. ஆனால், மழையால் இன்றைய ஆட்டம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. மழை காரணமாக இன்று நடக்க வேண்டிய ஐந்தாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் சற்று முன் தான் தொடங்கியது.

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இந்த சூழலில் நான்காம் நாளான நேற்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, முதல் நாள் ஆட்டம் ரத்து. நான்காம் நாள் ஆட்டம் ரத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் வானிலை காரணமாக சீக்கிரமாக முடித்துக் கொள்ளப்பட்டது என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஒட்டுமொத்தமாக 180 ஓவர்கள் கூட முழுதாக நடக்கவில்லை. 

இந்த பரபரப்பான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வடக்கே நடந்திருந்தால், ஒரு ஓவர் கூட பாதிக்கப்பட்டிருக்காது. இந்நேரத்துக்கு நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தொடக்கத்தில் இருந்தே, பைனலில் நியூசிலாந்து தான் வெற்றிப் பெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் வாகன். அதையே சற்று காட்டமாக கூறிவருகிறார். அதன் காரணம், அவர் எந்த கருத்து சொன்னாலும், இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிப்பார்கள் என்பது தான். அதைப் போலவே இன்றும் அவரது டீவீட்டுக்கு ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்