'இந்திய அணியில் ஒரு இங்கிலாந்து தாதா'!.. அசுரத்தனமான பவுலிங்... புது வரலாறு படைத்த இஷாந்த் சர்மா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை முறியடித்து இஷாந்த் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை சேர்த்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே அரை சதமடித்தார். இதில் மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேற்றையப் போட்டியில் டேவான் கான்வே 54 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த விக்கெட்டின் மூலம் இங்கிலாந்து ஆடுகளத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
மற்ற செய்திகள்