உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'பல திட்டங்களோடு... ஆசை ஆசையாய் காத்திட்டு இருந்தோம்'!.. பிசிசிஐ கனவுக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் பிசிசிஐ மூத்த அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'பல திட்டங்களோடு... ஆசை ஆசையாய் காத்திட்டு இருந்தோம்'!.. பிசிசிஐ கனவுக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியானது வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்குகிறது.

ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட சூழலில், அந்த பிரச்சினை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த மே19ம் தேதி முதல் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் பயோ பபுள் உருவாக்கப்பட்டது. தற்போது பபுளில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜூன் 2ம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர். 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் 3 மாதங்கள் கொண்ட நெடுந்தொடராகும். நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரானது ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, இந்த நீண்ட தொடரில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இருந்தால் மன அழுத்தம் குறைந்து சிறப்பாக ஆடுவார்கள் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், வீரர்களுடன் குடும்பத்தினரும் இங்கிலாந்து சுறுப்பயணத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல இந்திய மகளிர் அணியினரின் குடும்பத்தினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் மகளிர் அணி அங்கு, ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. 

அதையொட்டி, பிசிசிஐ-க்கு முக்கிய நிபந்தனை விதித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய போட்டியில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்கும் போட்டியை காண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிசிசிஐ அதிகாரிகள் குறைந்தது 10 நாட்கள் குவாரண்டைனில் இருந்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்படுவதால் அவர்கள் அங்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மற்ற செய்திகள்