"சீக்கிரமா குணமடைஞ்சு வாங்கப்பா.." பிரபல 'இந்திய' வீரரின் 'மகள்' வரைந்த 'ஓவியம்'.. உருகிப் போன 'நெட்டிசன்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றுக்கு மத்தியில், 14 ஆவது ஐபிஎல் தொடர், இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த தொடர், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

"சீக்கிரமா குணமடைஞ்சு வாங்கப்பா.." பிரபல 'இந்திய' வீரரின் 'மகள்' வரைந்த 'ஓவியம்'.. உருகிப் போன 'நெட்டிசன்கள்'!!

ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் வீரர்கள், பயோ பபுள் மூலம் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்த போதும், கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னை அணியைச் சேர்ந்த சிலரும், கொரோனா மூலம் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சஹாவும், டெல்லி வீரர் அமித் மிஸ்ராவும், அடுத்தடுத்து கொரோனா தொற்று மூலம் பாதிப்பு அடைந்தனர். இதன் பிறகு, ஐபிஎல் போட்டிகளும், பாதியில் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் போட்டிகள், திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக, வெளிநாட்டு வீரர்களும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது, எங்கு வைத்து நடைபெறும் என்பது குறித்து, கொரோனா தொற்று ஓய்ந்த பின் பிசிசிஐ தகவல் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விரித்திமான் சஹா (Wriddhiman Saha), கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து முழுமையாக குணமடைய வேண்டி, அவரது மகள் வரைந்த ஓவியம் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.

சூப்பர்மேன் கதாபாத்திரம் ஒன்று, கொரோனாவை ஓங்கி அடித்து விரட்டுவது போல, ஓவியம் ஒன்றை வரைந்த சஹாவின் மகள், 'சீக்கிரமாக குணமடைந்து வாருங்கள் பாபா' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஓவியத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சஹா, 'மகளின் வாழ்த்தை தான், இப்போது எனது உலகமாக நான் கருதுகிறேன். நான் விரைவில் குணமடைந்து வர, நல் வாழ்த்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை விரைவில் குணமடைந்து வர, மகள் வரைந்த இந்த ஓவியம், நெட்டிசன்களை அதிகம் நெகிழச் செய்துள்ளது.

 

மற்ற செய்திகள்