"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'!!!

இந்த சீசனில் முதல் முதலாக நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய விருத்திமான் சஹா, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக ஆடினார். 45 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி முதல் ஆட்டத்திலேயே அசத்திய சஹாவுக்கு சச்சின், சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

சஹா 'smart' பேட்டிங் ஆடியதாக குறிப்பிட்ட சச்சின், அவரது பேட்டிங்கை மிகவும் ரசித்து பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதே போல இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான ஆர்.பி. சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், '2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் ஆடி வரும் சிறந்த விக்கெட் கீப்பர், நல்ல ஸ்ட்ரைக் ரேட் இருந்த போதும், ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது கிடைக்கிற வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுளளார். 

வினய் குமார், ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா, மனோஜ் திவாரி உள்ளிட்ட பலரும் சஹாவின் இன்னிங்ஸ்க்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட சஹாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்