என் காலேஜ் நோட்ஸ் அதுல தான் இருக்கு.. லக்கேஜை திருப்பி அனுப்புற ஐடியா இருக்கா..? ஐசிசிக்கு வந்த பரபரப்பு புகார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தங்களது பொருள்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று ஐசிசி மீது அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் காலேஜ் நோட்ஸ் அதுல தான் இருக்கு.. லக்கேஜை திருப்பி அனுப்புற ஐடியா இருக்கா..? ஐசிசிக்கு வந்த பரபரப்பு புகார்..!

சமீபத்தில் ஓமன் நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி முடிவடைந்தும் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் 2 வாரம் ஆகியும் இன்னும் அவர்களது பொருள்கள் ஓமன் நாட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Worst is my college notes are in it, Ireland Gaby Lewis reminds ICC

இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை கேபி லூயிஸ் (Gaby Lewis) ஐசிசி மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘எங்களது லக்கேஜ் குறித்து ஏதாவது அப்டேட் இருக்கிறதா ஐசிசி? 13 நாட்களை கடந்து அவை இன்னும் ஓமன் நாட்டிலேயே இருக்கின்றன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் எனது கல்லூரி நோட்ஸ்களும் அதில்தான் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

Worst is my college notes are in it, Ireland Gaby Lewis reminds ICC

இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ICC, GABYLEWIS, IRELAND

மற்ற செய்திகள்