‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..! நடக்குமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி மழையால் தடைபட்டுள்ளது.

‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..! நடக்குமா..?

இங்கிலாந்து மான்செஸ்டர் மைதானத்தில் இன்று(09.07.2019) இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். இதில் மார்டின் கப்தில் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. இதில் ஹென்றி நிக்கோல்ஸ் 28 ரன்களிலும், வில்லியம்சன் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் நிதானமாக ஆட, மறுபுறம் விக்கெட் அடுத்து விழுந்து கொண்டிருந்தது. 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்களை நியூஸிலாந்து எடுத்திருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டக்வொர்த் முறைப்படி நியூஸிலாந்து அணியில் இன்னிங்ஸ் பாதியிலேயே நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னிங்ஸ் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 237 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 148 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் போட்டி நாளை தொடர வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி ரத்தானால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, INDVNZ, CWC19, TEAMINDIA, SEMIFINALS, RAIN, DUCKWORTH LEWIS