‘எங்ககிட்ட இருக்கறது இந்தியாவிடம் இல்லவே இல்லை’.. இந்திய அணியை குறித்து கூறிய இங்கிலாந்து வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹூசைன் இந்திய அணியின் பேட்டிங் குறித்த தனது கருத்தை கூற்யுள்ளார்.

‘எங்ககிட்ட இருக்கறது இந்தியாவிடம் இல்லவே இல்லை’.. இந்திய அணியை குறித்து கூறிய இங்கிலாந்து வீரர்!

உலகக்கோப்பைத் தொடரில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. மே 30 தொடங்க உள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் வங்க தேசம் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.

உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் ஏதேனும் மாறுதல் இருந்தால் மே 23 -ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து அணி 3 வீரகளை மாற்றி இறுதிப்பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹூசைன் உலகக்கோப்பை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் விராட் கோலி, வில்லியம்சன், கிறிஸ் கெய்ல், ரஸல், ரஷித் கான், பும்ரா ஆகிய வீரர்கள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார்கள் என கூறினார்.

மேலும் கூறிய அவர்,‘நான் மட்டும் எதிரணி கேப்டனாக இருந்திருந்தால் இங்கிலாந்து அணியைப் பார்த்து பயந்திருப்பேன். தற்போது உள்ள இங்கிலாந்து அணியில் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 300 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளனர். ஒருநாள் போட்டியில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே இருக்கும் வித்தியாசம் என்வென்றால், இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் உள்ளது. ஆனால் இந்தியாவிடம் இது இல்லவே இல்லை. அதேபோல்தான் அவர்களின் பந்து வீச்சும் உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

ICCWORLDCUP2019, TEAMINDIA, MENINBLUE