‘அடிமேல் அடி வாங்கும் இலங்கை’.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி மாஸ் காட்டிய ஆஃப்கான் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறி வருகிறது.

‘அடிமேல் அடி வாங்கும் இலங்கை’.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி மாஸ் காட்டிய ஆஃப்கான் வீரர்!

இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று இன்று(04.06.2019) கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான திமுத் கருணாத்னே மற்றும் குசல் பேரேரா நிதானமாக ஆட ஆரம்பித்தனர். இதில் கருணாத்னே 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய திருமன்னே, பேரேராவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆஃப்கான் வீரர் நபியின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த வீரர்கள் குசல் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகிய இருவரும் அதே ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களிலும் சொற்ப ரன்களில் தொடர்ந்து அவுட்டாக 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை இலங்கை எடுத்துள்ளது. போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால் தற்காலிகமாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ICCWORLDCUP2019, NABI, AFGVSSL, AFGHANATALAN