‘கோலாகலமாக தொடங்கியது உலகக்கோப்பை! பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

‘கோலாகலமாக தொடங்கியது உலகக்கோப்பை! பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கி வருகின்ற ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று (29/05/2019) பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கண்கவர் இசைநிகழ்ச்சியுடன் 12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.

இந்த தொடக்கவிழாவில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணி வீரர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்வான் ஆகியோர், ரசிகர்களின் ஆரவாரத்துடன் உலகக்கோப்பையை மேடைக்கு எடுத்து வந்தனர்.

இந்நிலையில், 12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க விழாவில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அணிகளுக்கு இடையே ''60 விநாடி சேலஞ்ச்'' கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இதில் இந்திய அணி தரப்பில் அனில் கும்ப்ளே, பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலீஸ், பிரெட்லீ, கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும், இதில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தொடக்க விழாவிற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட 10 அணிகளின் கேப்டன்களும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று. ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் ஹாரியை சந்தித்து உரையாடியுள்ளனர்.

ICCWORLDCUP2019, OPENING CEREMONY