‘அட்லீஸ்ட் தோனி ரிட்டயர் ஆகும்போதாச்சும்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எழுந்த புது சிக்கல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் அதிகப்படியான வர்ணனை எதிரொலியாக, உலகக்கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கக் கோரி இணையதளத்தில் ஒரு கையெழுத்து இயக்கம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

‘அட்லீஸ்ட் தோனி ரிட்டயர் ஆகும்போதாச்சும்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எழுந்த புது சிக்கல்!

உலகக் கோப்பை லீக் போட்டிகளின் சமீபத்திய ஆட்டங்களில் தோனியின் பெர்ஃபார்மன்ஸ் அதிருப்தி தரும் விதமாக அமைந்ததாக,  பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். சச்சினில் தொடங்கி, சவுரவ் கங்குலி வரை தோனியின் ஆட்டமுறைமையை பற்றிய கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

எனினும் இவர்கள் சீனியர்கள் என்பதாலும், இன்ன பிற காரணங்களாலும் பெருவாரியான ரசிகர்கள், தோனியின் மீதான விமர்சனத்தை ஓரளவுக்காவது ஒப்புக்கொள்ளச் செய்தனர். வெகுசிலர் தோனியின் ஆட்டத்தில் உள்ள ப்ளஸ்களையும் முன்வைத்தனர். குறிப்பாக பும்ரா போன்ற வீரர்கள் தோனி அதிக பிரஷரை எடுத்துக்கொண்டு ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய பெஸ்ட் ஃபினிஷர் தோனி என்று கருத்து கூறினர்.

ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனியை விமர்சிக்கும் வகையிலும், ரசிகர்கள் அதிருப்தி அடையும் வகையிலும் தொடர்ந்து கமெண்ட்ரி கொடுத்ததால் ரசிகர்கள் மட்டுமல்லாது, சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கடுப்பாகி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பணிபுரியுபவரான ரசூல் இதுபற்றிய தனது ட்வீட்டில், ‘தோனி ஓய்வு பெற்றதன் பிறகாவது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமெண்ட்ரியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, IPL2019, MSDHONI, CSK, TEAMINDIA, INDVBAN