“இது எல்லாம் தாங்க... CSK இதையெல்லாம் சரி பண்ணிட்டா... சும்மா ’கெத்தா’ Playoff-க்குள்ள நுழைஞ்சிடலாம்!!!" - தோனியின் பிளான் என்ன???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி பெற்றது.

“இது எல்லாம் தாங்க... CSK இதையெல்லாம் சரி பண்ணிட்டா... சும்மா ’கெத்தா’ Playoff-க்குள்ள நுழைஞ்சிடலாம்!!!" - தோனியின் பிளான் என்ன???

தொடர்ந்து, பஞ்சாப் அணிக்கு எதிராக விக்கெட்டை இழக்காமல் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், சென்னை பழைய பார்முக்கு வந்து விட்டது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த 2 போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியது. will dhoni and co sort out all issues and make way to playoffs

பந்து வீச்சில் ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் சென்னை அணி இருக்கும் நிலையில் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சற்று சொதப்பலாக இருந்தது. இனிவரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நேற்று ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே, சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு சற்று புத்துணர்ச்சியை அளித்தது. will dhoni and co sort out all issues and make way to playoffs

இத்துடன் நின்று விடாமல் இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில், தோனி செய்த சில சிறப்பான மாற்றங்கள் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணங்களாக இருந்தது.

பவர் பிளே ஓவர்களில் சென்னை அணி பெரிதாக ரன் குவிக்காமல் திணறி வரும் நிலையில், சாம் குரானை தொடக்க ஆட்டக்காரராக தோனி களமிறங்கச் செய்தார். அவரும் தொடக்கத்தில் சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் பின் வந்த வீரர்கள் நெருக்கடி இல்லமால் ஆட முடிந்தது.

இனிவரும் போட்டிகளிலும் சாம் குரான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி காட்டும் பட்சத்தில் சென்னை அணி பவர் பிளே ஓவர்களில் நல்ல ஸ்கோரை குவிக்கலாம். அதே போல, நேற்றைய போட்டியில் சென்னை அணியில் 7 பேர் பந்து வீச்சாளர்களாக செயல்பட்டனர். ஒரு பந்து வீச்சாளர் சொதப்பும் நிலை ஏற்பட்டால், மற்ற ஒருவரைக் கொண்டு அதனை சரி செய்ய தோனி இந்த வியூகம் வகுத்துள்ளார்.will dhoni and co sort out all issues and make way to playoffs

அது மட்டுமில்லாமல், நேற்றைய போட்டியில் பியூஷ் சாவ்லா ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசினார். இதனால், அவருக்கு பதிலாக ஜெகதீசனை அணியில் இடம்பெறச் செய்து, தாஹிருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அப்போது பேட்டிங் ஆர்டர் இன்னும் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை இம்ரான் தாஹிர் எடுத்திருந்தார்.

நேற்றைய போட்டியில் பல புதிய திட்டங்களை தோனி வகுத்த நிலையில், அது சென்னை அணிக்கு கை கொடுத்தது. அதனை அடுத்து வரும் போட்டிகளிலும் தொடர்வாரா அல்லது இன்னும் பல புது திட்டங்களை தோனி வகுத்துக் கொண்டு சென்னை அணி களமிறங்கி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஏன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்