‘அவரோட வயசு பத்தி பேச தேவையில்ல’... ‘ஆனா, தோனி இத செய்யாம’... ‘ஐபிஎல் போட்டி விளையாட முடியாது’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட உள்ள தோனிக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.

‘அவரோட வயசு பத்தி பேச தேவையில்ல’... ‘ஆனா, தோனி இத செய்யாம’... ‘ஐபிஎல் போட்டி விளையாட முடியாது’...

கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை தோனி தவிர்த்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சர்வதேச போட்டியில் ஓய்வு பெறுவதாக தோனி திடீரென அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெறுவதாக வதந்திகள் பரவிய நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியின்போது, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட இருப்பதை தோனி உறுதி செய்தார்.

Will be impossible to perform if he decides on playing only IPL to IPL

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்த பேட்டியில், தோனிக்கு அறிவுரை கூறியுள்ளார். ‘தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட முடிவெடுத்துவிட்டால், ஐபிஎல் தொடருக்கு மட்டும் வந்து விளையாடிச் செல்வது முடியாது. அதிலும் பயிற்சியின்றி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவது சாத்தியமில்லை.

Will be impossible to perform if he decides on playing only IPL to IPL

ஐபிஎல் தொடரில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விளையாடப் போகிறேன் என தோனி முடிவு செய்துவிட்டால், உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில் தோனி அதிகமாக விளையாடினால்தான் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். இல்லாவிட்டால் அவரால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை.

தோனியின் வயதைப் (39) பற்றிப் பேசுவது சரியல்ல. அவரின் வயதையும் மீறி தோனி சிறப்பாக விளையாடுகிறார். அதற்கு ஏற்றாற்போல் உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஓராண்டில் 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், திடீரென ஐபிஎல் போட்டியில் விளையாடினால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிந்தது.

Will be impossible to perform if he decides on playing only IPL to IPL

நீங்கள் என்னதான் கிரிக்கெட் விளையாடிப் பயிற்சி எடுத்தாலும் ஒவ்வொரு சீசனிலும் வெற்றி, தோல்விகள் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கிறிஸ் கெயிலுக்குக் கூட ஏற்ற இறக்கம் இருக்கும். ஆதலால் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட தோனி முடிவு எடுத்தால், உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தலாம். முதல்தரப் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாடலாம்.

சிலர் என்னதான் சாதித்திருந்தாலும், அவர்களின் ஃபார்ம் பாதிக்கப்படும்போது அது பாதிக்கும். சவாலாக மாறும். அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறார் என்பதில்தான் சவால் இருக்கிறது’ இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்