"இன்னைக்கி நான் முடிவு பண்ணிட்டேன்.." சர்வதேச போட்டிக்கு குட்பை.. திடீரென அறிவித்த பிரபல மும்பை இந்தியன்ஸ் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை கடுமையாக தடுமாறி வருகிறது.
இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளிலும், தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
முதல் முறையாக, முதல் ஆறு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, தங்களின் அடுத்த லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாளை (21.04.2022) சந்திக்கவுள்ளது.
ஓய்வு முடிவை அறிவித்த பிரபல வீரர்
இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் கூட, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது சற்று கடினமான ஒன்று தான் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல வீரர் ஒருவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை திடீரென அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கைரன் பொல்லார்ட், கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியை தலைமை தாங்கி இருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியை தலைமை தாங்கி வந்த பொல்லார்ட், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.
பொல்லார்ட் வந்தாலே அதிரடி தான்..
ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்த பொல்லார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வீரராக திகழ்ந்து வந்தார். அது போல, கடந்த பல ஐபிஎல் சீசன்களாக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் பொல்லார்ட், ஐபிஎல் தொடரில் அதிரடி மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் தொடர்ந்து வலம் வருகிறார்.
போட்டியின் சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொல்லார்ட் களத்தில் இருக்கிறார் என்றால், எதிரணி பந்து வீச்சாளருக்கு நிச்சயம் ஒரு பதற்றம் இருக்கும். இதற்கு மத்தியில், சர்வதேச போட்டியில் இருந்து தனது ஓய்வினை பொல்லார்ட் அறிவித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றையும் பொல்லார்ட் வெளியிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ், ரசிகர்கள் பலரும் உருக்கமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்