என்ன தினேஷ் கார்த்திக் ‘ஹெல்மெட்’ மட்டும் வித்தியாசமா இருக்கு.. அப்படி என்ன ஸ்பெஷல்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வித்தியாசமாக ஹெல்மெட் அணிந்திருந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 70 ரன்களும், ஹெட்மையர் 42 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களும், சபாஷ் அகமது 45 ரன்களும் எடுத்தனர். இதில் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணிந்திருந்த ஹெல்மெட் இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற வீரர்களை விட தினேஷ் கார்த்திக் அணிந்திருந்த ஹெல்மெட் சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த வகையான ஹெல்மெட் மற்றதைக் காட்டிலும் எடை மிகவும் குறைவு. இதன் காரணமாகவே தினேஷ் கார்த்திக் அதனை பயன்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்