'அவருக்கு நல்ல அனுபவம் இருக்கு...' மிடில் ஆர்டர்ல ஏன் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்க கூடாது...? 'சிஸ்கே டீம்ல இருக்கப்போ செமயா விளையாடிருக்காரு...' - பிரக்யான் ஓஜா கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமிடில்-ஆர்டரில் நன்றாக விளையாடும் கேதார் ஜாதவிற்கு ஏன் அதில் வாய்ப்பு கொடுக்க கூடாது என நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தார் கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர்.
இந்திய கிரிக்கெட் வீரரான கேதார் ஜாதவ், 2021ஆம் ஆண்டின் ஐபில் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். இந்த டி20 தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தாததே இதற்கு காரணமாக இருக்கும் என கிரிக்கெட் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அதோடு நேற்று மும்பைக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஐந்து விக்கெட்களை வெறும் 8 ரன்களுக்கு இழந்து, மீண்டுமொரு முறை தன் மிடில்-ஆர்டர் ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும் காரசார விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த தொடர் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிரக்யான் ஓஜாவும் தனது கருத்தை கூறியுள்ளார்.
அதில், 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிடில்-ஆர்டர் நிலை மோசமாக உள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும் கேதார் ஜாதவ் இதற்கு முன்பு சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார்.
ஜாதவ் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர். அவரை அணியின் மீடில் ஆர்டரில் களமிறக்கி பரிசோதிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஜாதவ், நிறைய பயிற்சி செய்துள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒரு தரமான வீரர் என்பதை நிருபிப்பார்.
அணியில் இவ்வளவு சொதப்பல்கள் இருப்பது தெரிந்தும், கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது? அவருக்கு மிடில்-ஆர்டர் அனுபவம் உள்ளது' எனக் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிரக்யான் ஓஜா.
மற்ற செய்திகள்