ஏன் ‘கோலி’ செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரல..? டிராவிட் கொடுத்த விளக்கம்.. இதுக்கு பின்னாடி இப்படியொரு ‘காரணம்’ இருக்கா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசெய்தியாளர் சந்திப்புக்கு கேப்டன் விராட் கோலி வராதது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது, இதனை அடுத்து இன்று (03.01.2022) இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளோம். இந்த மைதானத்தில் பந்து வேகமாக வரும். ஆனால் செஞ்சூரியன் மைதானம் போல் பந்து பவுன்ஸ் ஆகாது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சமமாகவே மைதானம் ஒத்துழைக்கும்’ என ராகுல் டிராவிட் கூறினார்.
அப்போதும் கேப்டன் விராட் கோலி ஏன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட் விராட், ‘விராட் கோலியிடம் தற்போது செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளேன். அதற்கு காரணம் கேப் டவுனில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் போட்டி, விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திப்பார். அது மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும். அப்போது உங்களுடைய கேள்விகள் அனைத்தையும் அவரிடம் கேட்கலாம்.
விராட் கோலி போட்டியில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். போட்டி நடைபெறும் போது, டாஸ் போடும் போது என அடிக்கடி அவர் இன்டர்வியூ கொடுத்துதான் வருகிறார். அதனால் அவரது 100-வது போட்டிக்கு முன்பு நிச்சயம் செய்தியாளர்களை சந்திப்பார்’ என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்