எதுக்கு தோனிக்கு ஆலோசகர் பதவி..? ‘இனிமேல் அப்படி கேட்பீங்க’.. ஒரே ஒரு பதில்தான்.. மொத்தமாக ‘ஆஃப்’ பண்ணிய கங்குலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் முன்னாள் கேப்டன் தோனி, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
ஆனாலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இருக்கும் போது புதிதாக ஆலோகர் ஒருவர் எதற்கு? என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஜய் ஜடேஜா, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். மேலும் பிசிசிஐ விதிகளின் படி ஒருவர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர் சஞ்சீவ் ஷர்மா புகார் அளித்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘2013-ம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு ஐசிசி தொடரையும் இந்தியா வெல்லவில்லை. டி20 போட்டிகளில் தோனிக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அதனால் அவரின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலமாக இருக்கும். இந்திய அணிக்கு அவருடைய ஆலோசனைகள் கண்டிப்பாக உதவும்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக், 2019-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். அது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது. அதுபோலதான் தோனியின் பங்களிப்பும் இந்திய அணிக்கு இருக்கும்’ என கங்குலி விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்