கோப்பையுடன் வேகமாக ஓடிய ரோஹித்.. "பிளேயர்ஸ் கிட்ட குடுக்காம என்ன பண்ணாரு தெரியுமா??.." வைரலாகும் விஷயம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் என இரண்டிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது இந்திய அணி.

கோப்பையுடன் வேகமாக ஓடிய ரோஹித்.. "பிளேயர்ஸ் கிட்ட குடுக்காம என்ன பண்ணாரு தெரியுமா??.." வைரலாகும் விஷயம்

"ரோஹித் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்.." எச்சரிக்கும் முன்னாள் வீரர்.. ஓஹோ, இதான் விஷயமா?

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையில், தொடர்ச்சியாக மூன்று தொடர்களை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. இதில், ஒரு போட்டியில் கூட, இந்திய அணி தோல்வி அடையவேயில்லை.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளிலும், இந்திய அணியின் கை தான் அதிகம் ஓங்கி இருந்தது. கடைசி இரண்டு டி 20 போட்டிகளில், இலங்கை அணி நிர்ணயித்த இலக்கினை மிகவும் எளிதாக இந்திய அணி எட்டிப் பிடித்திருந்தது.

கேப்டன் ரோஹித்

தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் இந்திய அணி, இந்தாண்டு நடைபெறவிருக்கும் டி 20 உலக கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதே போல, இந்திய அணியின் புதிய கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மா, மிகச் சிறப்பாக அணியை தலைமை தாங்கி வருகிறார்.

whom rohit sharma handed the trophy after t20 series win

கோப்பையுடன் ஓடிய கேப்டன்

ஆடும் லெவன், பந்து வீச்சு முறை, பேட்டிங் பொசிஷன் என அனைத்திலும் ரோஹித் எடுக்கும் முடிவுகள், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பினைத் தான் இந்திய அணிக்குத் தேடித் தருகிறது. இதனால், அவரது கேப்டன்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்ற பிறகு, கோப்பையைக் கொண்டு ரோஹித் ஒருவரிடம் கொடுத்தது பற்றியான செய்திகளும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆர்ப்பரித்த வீரர்கள்

கோப்பையைக் கைப்பற்றியதும் வேகமாக வந்த ரோஹித் ஷர்மா, ஓடிச் சென்று ஒருவரிடம் கோப்பையைக் கொடுக்க, அணியின் மற்ற வீரர்களும் அவரை அழைத்துக் கொண்டு வருகின்றனர். உடனே அவரும் கோப்பையை உயர்த்திக் காட்ட, அணி வீரர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

பிசிசிஐ பிரதிநிதி

உடனடியாக, நெட்டிசன்களும் யார் அந்த நபர் என தேட ஆரம்பித்தனர். முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெயதேவ் ஷா தான் அந்த நபர். இந்தியா மற்றும் இலங்கை தொடரின், பிசிசிஐ பிரதிநிதியாக ஜெயதேவ் ஷா செயல்பட்டு வருகிறார். இவர் முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, பல சதங்கள் அடித்தும் அசத்தியுள்ளார்.

whom rohit sharma handed the trophy after t20 series win

அவரிடம் தான் கோப்பையை வேகமாக சென்று ரோஹித் ஷர்மா கொடுக்க, அணியினரும் ஒரு சேர அழைத்து வந்து ஆர்ப்பரித்து வெற்றியைக் கொண்டாடினர்.

"இந்த போர் இதோட நிக்காது.. இன்னும் பல வருஷம் நடக்கலாம்.. ரெடியா இருங்க.." இங்கிலாந்து அமைச்சரின் பரபரப்பு கருத்து! பதறும் உலக நாடுகள்

ROHIT SHARMA, TROPHY, T20 SERIES WIN, வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ரோஹித், பிசிசிஐ பிரதிநிதி

மற்ற செய்திகள்