RCB-யின் அடுத்த கேப்டன் யாரு? - அணி நிர்வாகம் கொடுத்த அதிரடி அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. இருப்பினும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. இந்நிலையில், அந்த அணி நிர்வாகம் அதிரடி அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கையில் மூட்டை.. எல்லையில் நின்று கதறி அழுத்த உக்ரைன் சிறுவன்.. மனசாட்சியை உலுக்கும் வீடியோ..!
பொறுப்பை துறந்த கோலி
கடந்த 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்," பெங்களூரு அணியை கோலியே வழி நடத்த வேண்டும். புது கேப்டனை அந்த அணி தேர்தெடுக்கும் வரை அவரே அந்த பொறுப்பில் இருக்க வேண்டும்" என விருப்பம் தெரிவித்து இருந்தார்.
3 வீரர்கள்
இருப்பினும், ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரது பெயரை அந்த அணி பரிசீலித்து வருவதாக அந்த அணி நிர்வாக அதிகாரி ஒருவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
அப்டேட்
இந்நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? என்ற விபரம் வரும் 12 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என அந்த அணி டிவிட்டர் வழியாக தெரிவித்துள்ளது. டூ பிளசிஸ்-க்கு கேப்டன் பதிவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதுபோல, கோலியின் ஆலோசனைக்கு இணங்க, முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பும் வரும் 12 ஆம் தேதி வெளியிடலாம் என நம்பப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ம் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்