‘எல்லா வொர்க்கையும் ஓரமா வச்சுட்டு’...!!! 'ஹாலிடேக்கு எங்கே போவீங்க’...!!! ‘ரசிகரின் சுவாரஸ்ய கேள்விக்கு’... ‘தோனியின் அசத்தல் பதில்’...!!! ‘இதுதான் என் பர்ஸ்ட் சாய்ஸ்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களுடன் கலந்துரையாடிய தோனி விடுமுறைக்கு செல்ல விரும்பும் இடம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

‘எல்லா வொர்க்கையும் ஓரமா வச்சுட்டு’...!!! 'ஹாலிடேக்கு எங்கே போவீங்க’...!!! ‘ரசிகரின் சுவாரஸ்ய கேள்விக்கு’... ‘தோனியின் அசத்தல் பதில்’...!!! ‘இதுதான் என் பர்ஸ்ட் சாய்ஸ்’...!!!

ஐபிஎல் போட்டிகளின் இடையில், ‘Gulf Ka Call' மீட் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பதிலளித்திருந்தார். இந்த வீடியோ பதிவை, தற்போது தனது யூடியூப் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

அதில் ரசிகர் ஒருவர் ‘அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு விடுமுறைக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்றால், எங்கு செல்ல விரும்புவீர்கள்?’ என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த தோனி, ‘ஹும்.... இந்தியாவின் மலைப்பிரதேசங்களுக்கு போக வேண்டுமென விரும்புவேன். கடந்த ஆண்டு கூட முசோரிக்கு அருகிலுள்ள மலைப்பிரதேசம் ஒன்றிற்கு குடும்பத்தினருடன் போயிருந்தேன். அங்கு முதல்முறையாக பனிப்பொழிவை கண்டு தான் மிகவும் என்ஜாய் செய்தேன்.

அதனால் இந்தியாவில் உள்ள மலைப்பிரதேசங்களுக்கு செல்வதே தன்னுடைய முதல் சாய்ஸ். அங்கு சென்று நேரத்தை செலவிடவே விரும்புகிறேன். நம்முடைய நாட்டிலேயே சிறப்பான பல இடங்கள் உள்ளதாகவும், அதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என கருதுகிறேன்’ என தோனி சிரித்தப்படியே தோனி கூறினார்.

Where would dhoni go for holiday? CSK posts viral video

மேலும் இந்த கேள்வி மிகவும் சிறப்பான கேள்வி என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஓய்வு அறிவித்துள்ள தோனி, ஐபிஎல்லின் பிளே-ஆப் சுற்றிலிருந்து சிஎஸ்கே வெளியேறியுள்ள நிலையில், தோனி நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரியர்களும் பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்