VIDEO: 'என் ரசிகர்கள் முன்னால...' 'நான் விளையாடுற கடைசி போட்டி...' - ஒய்வு குறித்து 'அதிகாரப்பூர்வ' தகவலை வெளியிட்ட 'தல' தோனி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார் 'தல' தோனி.
ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணியின் முதுகெலும்பாகவும், சிறந்த கேப்டனாகவும் தோனி திகழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது, வயது காரணமாக பேட்டிங்கில் முன்பு போல் அதிரடி காட்ட முடியவில்லை. எனவே தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்றே பல முன்னாள் வீரர்களும் கூறி வந்தனர்.
முன்னாள் வீரர்கள் பலர் தோனி சீக்கிரமாக ஓய்வை அறிவிப்பார் என கூறி வருவதால், சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். இந்த நிலையில், தற்போது தோனி எப்போது ஓய்வு எடுப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உள்பட மூன்று சென்னை வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை ரசிகர்கள் பலரின் கேள்விகளுக்கு சென்னை வீரர்கள் பதில் கூறினர்.
கலந்துரையாடலில் தோனியின் ரசிகர் ஒருவர், தோனியிடம் நீங்கள் சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவித்தது எதனால்? அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா என்று கேட்டார். மேலும், பேர்வெல் போட்டி எதிலும் பங்கேற்பீர்களா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதற்கு தோனி அளித்த பதிலில், “ஆகஸ்ட் 15-ஆம் தேதியை விட சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது. என்னுடைய கடைசி போட்டியை பொறுத்தமட்டில், நான் சென்னை அணியில் விளையாடுவது நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். சென்னை அணிக்காகவே எனது கடைசி போட்டியும் இருக்கும். அதுவும் சென்னை மண்ணில் எனது ரசிகர்கள் முன்னிலையில் தான் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என முடிவு செய்துள்ளேன், அது நடக்கும் என நிச்சையமாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
தோனியின் இந்த பேச்சு தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நற்செய்தியை சென்னை ரசிகர்கள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
You will still get the opportunity to bid me farewell -Dhoni pic.twitter.com/htmg0dCSOo
— Ritesh Madane (@MadaneRitesh) October 5, 2021
மற்ற செய்திகள்