T20 World Cup: அடித்து ஆடும் மழை.. ICC வச்சிருக்கும் பக்கா பிளான்.. ஆனா அதுவும் இந்த போட்டிகளுக்கு மட்டும் தானாம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை டி 20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், மழை பல போட்டிகளை பாதித்தும் வருகிறது.
Also Read | தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்த தொடரில் க்ரூப் 1-ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் குரூப்-2 வில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த வருட T20 போட்டிகள் துவங்கியதில் இருந்தே மழை குறித்து தான் பலரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர். ஆட்டம் மழையால் பாதிக்கப்படுவதால் முன்னணி அணிகளுமே அரையிறுதிக்கான போராட்டத்தில் கலக்கமடைந்திருக்கின்றன. ஆனால், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதற்காகவே 'ரிசர்வ் டே' எனும் விதிமுறையை வைத்திருக்கிறது. இது அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு மட்டுமே பொருந்தும்.
அதாவது நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் அரையிறுதி அல்லது இறுதி போட்டி நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ரிசர்வ் டே அன்று அந்த போட்டி நடைபெறும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் திட்டமிடப்பட்ட தேதியில் ஒரு அணிக்கு குறைந்தது 5 ஓவர்கள் கூட பந்து வீச சாத்தியமில்லை என்றால் போட்டி ரிசர்வ் டே-வில் நடத்தப்படும்.
ஒருவேளை போட்டி துவங்கிய பிறகு மழை குறுக்கிட்டால் எங்கே போட்டி கைவிடப்பட்டதோ, அங்கிருந்து ரிசர்வ் டே-வில் போட்டி துவங்கும். அதே வேளையில் அறையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டி தவிர மற்ற ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே கிடையாது. நடப்பு டி20 உலகக் கோப்பையின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | பூமில இருந்து உருவாகும் வினோத சத்தம்? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆடியோ.. பரபரப்பு பின்னணி..!
மற்ற செய்திகள்