ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிரா அல்லது டை ஆனால் யார் வின்னர்..? ரசிகர்கள் முன்வைத்த ‘முக்கிய’ கேள்வி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒருவேளை டை அல்லது டிரா ஆனால் எந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்? என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிரா அல்லது டை ஆனால் யார் வின்னர்..? ரசிகர்கள் முன்வைத்த ‘முக்கிய’ கேள்வி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடரில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் விளையாடின. இந்த 9 அணிகள் மொத்தமாக 25 தொடரில் மோதியதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

What happens if the WTC final ends in draw or tie?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What happens if the WTC final ends in draw or tie?

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் எதாவது காரணங்களால் நடத்த முடியாமல் போனாலோ அல்லது போட்டி டை அல்லது டிராவில் முடிந்தாலோ எந்த அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What happens if the WTC final ends in draw or tie?

இதுகுறித்து விளக்கமளித்த ஐசிசி, ‘போட்டி நடத்த முடியாமல் போனால் டை பிரேக்கர் ஏதும் கிடையாது. ஆனால் ரிசர்வ் டே நிச்சயம் உண்டு. அதேபோல் நடைபெறும் போட்டி டிராவிலோ அல்லது டை ஆனாலோ இரு அணிகளுக்கும் சாம்பயன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும். இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் சாம்பியன் என்று அறிவிக்கப்படும்’ என விளக்கம் அளித்துள்ளது.

மற்ற செய்திகள்