"பிராவோ ஃபீல்டிங் பாத்து.." மைதானத்தில் தோனி சொன்ன வார்த்தை.. வைரலாகும் 'ஆடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் நடப்பு தொடரின் லீக் சுற்று போட்டிகள், தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

"பிராவோ ஃபீல்டிங் பாத்து.." மைதானத்தில் தோனி சொன்ன வார்த்தை.. வைரலாகும் 'ஆடியோ'!!

Also Read | வானத்தில் தோன்றிய ஜெல்லி மீன் போன்ற வடிவம்.. திகைத்துப்போன பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பதை அறிய, அனைத்து அணிகளின் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

தங்களின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே

இதில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், சில முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஜடேஜா தலைமையில் 8 போட்டிகள் ஆடி இருந்த சிஎஸ்கே, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் குதூகலமான நிலையில், அவரது தலைமையில் 3 போட்டிகள் ஆடி, இரண்டில் வெற்றி கண்டுள்ளது.

well done old mans says ms dhoni about bravo fielding

எல்லாம் ஜெயிச்சு ஆகணும்..

மீதமுள்ள 3 போட்டிகளில் சிஎஸ்கே நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும், மற்ற போட்டிகளின் முடிவுகள், சாதகமாகவும் அமைய வேண்டும். மீதமுள்ள போட்டிகளில் முறையே மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆடவுள்ளது.

இதனிடையே, டெல்லி அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே பெற்றிருந்த வெற்றி, அந்த அணியின் ரசிகர்கள் மத்தியல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (08.05.2022) நடைபெற்றிருந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.

well done old mans says ms dhoni about bravo fielding

சிக்கித் தடுமாறிய டெல்லி அணி

அதிகபட்சமாக, டெவான் கான்வே 87 ரன்கள் எடுத்து பட்டையைக் கிளப்பி  இருந்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி, சிஎஸ்கே அணியின் அசத்தலான பந்து வீச்சால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18 ஆவது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால், 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணி ஃபீல்டிங் செய்த போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே, வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ ஆடி வருகிறார். இதனால், அவருக்கும் தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கும் நடுவே மிகப் பெரிய ஒரு பிணைப்பு உள்ளது.

well done old mans says ms dhoni about bravo fielding

வயசான ஆளுங்க நீங்க..

அந்த வகையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பிராவோவை பார்த்து தோனி சொன்ன விஷயம், பெரிய அளவில் லைக்குகளை அள்ளி வருகிறது. 17 ஆவது ஓவரை சிஎஸ்கே வீரர் தீக்ஷனா வீச, பந்தை எதிர்கொண்ட நோர்ஜே கவர் பகுதியில் அடிக்க, ஃபீல்டிங் நின்ற பிராவோ, அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

அப்போது, அதனை பாராட்டும் வகையில், "Well Done Oldman" என பிராவோவை பார்த்து கூறினார். சீனியர் வீரர் என்பதால், வயதான நபர் என பிராவோவை பார்த்து தோனி சொன்ன விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CRICKET, IPL 2022, CSK, MS DHONI, DWAYNE BRAVO

மற்ற செய்திகள்