"அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ரிஷப் பண்ட் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

"அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | அவங்க பொருளை எடுத்து அவங்களையே.. ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் கங்குலி போட்டுக்கொடுத்த பிளான்.. சீக்ரட்டை உடைத்த பதானி..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது.

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

We will Miss Him says DC Skipper david warner about Rishabh Pant

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வார்னர் கேப்டன்

இந்த சூழ்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட வார்னர் கடந்த 7 வருடங்களாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 432 ரன்களை குவித்திருந்தார். ஏற்கனவே டெல்லி அணிக்காக விளையாடியுள்ள வார்னரை மீண்டும் ஏலத்தில் எடுத்திருந்தது டெல்லி அணி நிர்வாகம்.

We will Miss Him says DC Skipper david warner about Rishabh Pant

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வார்னர்,"ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர். நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம். என்மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அணி எப்போதும் எனக்கு சொந்த வீடு போலவே இருந்திருக்கிறது. திறமையான வீரர்களை வழிநடத்த ஆவலாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | மத்தியான நேரத்துல திடீர்னு இரவாக மாறிய வானம்.. அதிர்ந்து போன மக்கள்.. வீடியோ..!

CRICKET, DAVID WARNER, RISHABH PANT

மற்ற செய்திகள்