"அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூரிய குமார் யாதவ் பற்றி ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் பேசியிருக்கிறார்.

"அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..!

Also Read | மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம்.. நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கமான ட்வீட்..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை T20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 239 ரன்கள் விளாசி இருந்த இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ், நியூசிலாந்து அணியுடனான தொடரிலும் தனது அதிரடியை தொடர்ந்தார். இரண்டு போட்டிகளில் அவர் 124 ரன்கள் அடித்திருந்தார். குறிப்பாக இரண்டாவது T20 போட்டியில் சூரிய குமார் யாதவ் அபாரமாக ஆடி சதமடித்தார். 51 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 111 ரன்களை குவித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார்.

We cannot afford Suryakumar Yadav in BBL Says Maxwell

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேனான க்ளென் மேக்ஸ்வெல் சூரிய குமார் யாதவின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள மேக்ஸ்வெல்,"நான் அந்த மேட்சை பார்க்கவில்லை. பின்னர் ஸ்கோர் கார்டை பார்த்துவிட்டு அதனை ஆரோன் ஃபின்ச்க்கு அனுப்பி மெசேஜ் செய்திருந்தேன். அவர் (சூரிய குமார் யாதவ்) வேறு கிரகத்தில் இருப்பதுபோல பேட்டிங் ஆடுகிறார். அடுத்த நாள் நான் இன்னிங்ஸின் முழு ரீப்ளேயையும் பார்த்தேன். அதில் சங்கடமான விஷயம் என்னவென்றால், அவர் எல்லோரையும் விட மிகவும் சிறந்தவர். நமக்கு கிடைத்த எவரும் அதற்கு அருகில் கூட இல்லை" என்றார்.

We cannot afford Suryakumar Yadav in BBL Says Maxwell

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக்கில் சூரியகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கிறதா? என மெக்ஸ்வெல்லிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,"அதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் நீக்கினால் தான் உண்டு" என சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.

Also Read | திருமணத்தை மீறிய உறவு.. சிறப்பு பூஜை என மந்திரவாதி செய்த நடுங்க வைக்கும் காரியம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்..!

CRICKET, SURYAKUMAR YADAV, BBL, MAXWELL

மற்ற செய்திகள்