‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவை முன்னிட்டு உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை கவுரவிக்கும் வகையில் கோலியின் மெழுகுச்சிலை கிரிக்கெட் கிரவுண்டுக்குள் வைக்கப்படுகிறது.

‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை!

ஐசிசியின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கொண்டாடும் வகையில், உலகப் புகழ் பெற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையில்,  லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தின் சார்பில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்படுவதற்காகவே கோலியின் மெழுகுச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று (வியாழன் மே 30, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்) லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து இந்த டோர்னமெண்ட் முடியும் வரை, அதாவது ஜூலை 15-ஆம் தேதி வரை வைக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் உசேன் போல்ட், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட உலகப் புகழ் பேட்ஸ்மேன்களின் வரிசையில் கோலியின் மெழுகுச்சிலையும் வைக்கப்படவுள்ளதாக இந்த மியூசியத்தின் ஜெனரல் மேனேஜர் ஸ்டீவ் டெவிஸ் தெரித்துள்ளார்.

கோலியின் இந்த ஐக்கானை மெழுகுச் சிலையாக வடிப்பதற்கு அவருடைய டிஷர்ட்களும், ஷூக்களுமே பெறப்பட்டதாகவும், உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையிலும் பேட்ஸ்மேனை கவுரவிக்கும் வகையிலும் இவ்வாறு மெழுகுச் சிலை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.