'அவர்கிட்ட டென்ஷன் இல்ல, கூலா விளையாடுறார்...' 'தன்னோட இடத்துல அவர் தான் வர போறார்னு தெரிஞ்சும்...' - பாராட்டி தள்ளிய வாட்சன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரூத்துராஜ் வந்தால் தான் சிஎஸ்கே அணியை விட்டு போகும் நிலை வரும் என தெரிந்தும் மூத்த வீரர் வாட்சன் இளம்வீரர் ரூத்துராஜை புகழ்ந்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

'அவர்கிட்ட டென்ஷன் இல்ல, கூலா விளையாடுறார்...' 'தன்னோட இடத்துல அவர் தான் வர போறார்னு தெரிஞ்சும்...' - பாராட்டி தள்ளிய வாட்சன்...!

ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 2020-ஆம் ஆண்டு பிளே  ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் 2021-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக அணிக்குள் இளைஞர்கள் கொண்டு வர முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலும் ஓப்பனிங் வீரர்களை மாற்றும் முடிவில் கேப்டன் தோனி இருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய ஓப்பனிங் வீரராக இருக்கும் வாட்சன், இனி வரும் வருடத்தில் சி.எஸ்.கே-விலிருந்து தன்னை நீக்கினாலும் பரவாயில்லை என்கிற ரீதியில் ரூத்துராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து கூறிய வாட்சன், 'சி.எஸ்.கேவின் இளம் வீரரான ரூத்துராஜ் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் ஆடுகளத்தில் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், டென்ஷன் ஆவது இல்லை எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் ஷாட்களை முன்பே திட்டமிடுவது இல்லை. பந்து வருவதை பார்க்கிறார். வேகமாக செயல்பட்டு எப்படி அடிக்க வேண்டும் என்று அடிக்கிறார். அவருடன் ஆடுவது சந்தோசமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

ரூத்துராஜ் வந்தால் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று வாட்சனுக்கு தெரிந்தும் அவர் இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்