‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளரை விராட் கோலி இடித்துவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா (9), விராட் கோலி (9) உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 16.5 ஓவர்களில் 140 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது. இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் 79 ரன்கள் அடித்து அசத்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் ரன் எடுக்க ஓடும்போது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸ்ஸின் தோள்பட்டையில் விராட் கோலி லேசாக இடித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, TEAMINDIA, INDVSA, T20, BEAURANHENDRICKS, CLASH, COLLIDE, VIRALVIDEO