Video: அடுத்தடுத்து '5 சதங்கள்' அடித்த இளம்வீரர்... அதென்ன 'எங்க' டீமை விட்டு... போனா மட்டும் 'நல்லா' அடிக்குறீங்க... கடுப்பான ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சி தொடரில் ஹிமாச்சல பிரதேசத்துக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் மும்பை அணியின் இளம்வீரர் சர்பராஸ் கான் இரட்டை சதமடித்து(226*) அவுட் ஆகாமல் இருக்கிறார். இதனால் நாளைய போட்டியில் தன்னுடைய இரட்டை சதத்தை அவர் முச்சதமாக மாற்றுவாரா? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சர்பராஸ் கான் 301* ரன்கள் அடித்து தன்னுடைய பேட்டிங் பார்மை நிரூபித்தார். இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெருமையுடன் ட்வீட் செய்து சர்பராஸ் கானை வாழ்த்தியுள்ளது. ஒருபுறம் கே.எல்.ராகுல் உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார்.
Sir-faraz Khan, take a bow! 🙌
He remained 3⃣0⃣1⃣* against Uttar Pradesh in the last game and is scoring at a strike rate of over hundred against Himachal Pradesh. 😱👏#SaddaPunjab #RanjiTrophy #HPvMUM https://t.co/kcyrvxuYWK
— Kings XI Punjab (@lionsdenkxip) January 27, 2020
தற்போது சர்பராஸ் கானும் செம பார்மில் இருப்பதால், இந்தமுறை கப் நமக்குத்தான் என பஞ்சாப் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அதே வேளையில் எங்க டீம்ல இருந்து வெளில போனா எல்லாரும் நல்லா அடிக்குறீங்களே என பெங்களூர் ரசிகர்கள் கடுப்புடன் ட்விட்டரில் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில் கே.எல்.ராகுல், சர்பராஸ் கான் இருவரும் ஒரு காலத்தில் பெங்களூர் அணிக்காக ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.