‘ஒரு காலத்துல எப்டி இருந்த டீம்’.. இப்போ இந்த நிலைமைக்கு வந்திருச்சே! இந்த உலகக்கோப்பையின் மோசமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர்கள் பந்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றின் 8 -வது போட்டி நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக குஷல் பேரேரா 78 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் மழை குறிக்கிட்டதால் போட்டி 41 ஓவர்களாக குறைப்பட்டு வெற்றி பெற 187 ரன்கள் என ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதில் ப்ரதீப் 4 விக்கெட்டுகளு, மலிங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் ஆஃப்கானிதான் வீரர் அடித்த பந்தை தடுக்க முடியாமல் இலங்கை வீரர்கள் ஒவ்வொருவராக தவறவிட்டு மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இலங்கை அணியின் மோசமாக ஃபீல்டிங் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
Fielding of the highest quality!!😂 pic.twitter.com/cVvt83gwpQ
— sam trego (@tregs100) June 4, 2019