ஹெல்மெட்டுக்கே இந்த கதியா..! பேட்டிங் மட்டுமில்ல பௌலிங்கிலும் மிரட்டிய ரஸல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஹெல்மெட்டுக்கே இந்த கதியா..! பேட்டிங் மட்டுமில்ல பௌலிங்கிலும் மிரட்டிய ரஸல்!

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய(25.04.2019) போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களான க்றிஸ் லின் மற்றும் சுபமன் கில் அடுதடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து நிதிஷ் ரானா மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூட்டணி ஜோடி சேர்ந்து ஆடியது. ஆனால் நிதிஷ் ரானா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த ரஸலும் அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.  இதில் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் 14 வது ஓவரை ரஸல் வீசினார். அப்போது ரஸல் வீசிய பந்து ராஜஸ்தான் வீரரின் ஹெல்மெட்டில் பலமாக விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

IPL, IPL2019, KKRVRR, RUSSELL