‘கடைசியில் நெஹ்ரா கொடுத்த டிப்ஸ்’.. ஆர்சிபி தோல்விக்கு காரணமா?.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியிடம் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 31 -வது போட்டி இன்று(15.04.2019) மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி கூட்டணி அதிடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஏபி டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்திருந்த போது பொல்லார்ட் செய்த ரன் அவுட் மூலம் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 19 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் 19 -வது ஓவரின் போது பெங்களூரு அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா சைகையின் மூலம் கேப்டன் விராட் கோலிக்கு ஏதோ தெரிவித்தார். இதனை அடுத்து அந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நெஹியை வீச வைத்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ்ர், பவுண்ட்ரிகளை விளாசி அந்த ஓவரிலேயே மும்பையின் வெற்றி வழிவகுத்தார்.
This guy told Kohli to let Negi bowl the second last over to #Pandya 😒 #IPL2019 #MIvRCB pic.twitter.com/mfpzTUEn3t
— MMSid (@musmassid) April 15, 2019