கையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன..? ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி தனது கையில் ஓநாய் படத்தின் டாட்டூ போட்டதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

கையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன..? ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதில் நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி 4 ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய சைனி, ‘முதல் போட்டி என்பதால் சற்று அழுத்தமாக இருந்தது. ஆனாலும் விக்கெட்டுகளை எடுத்தேன். இதில் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்தது எதிர்பாராதது’ என கூறினார். மேலும் டாட்டூ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘என் அண்ணன் சிறுவயது முதலே ஓநாய்கள் படம் அதிகமாக பார்ப்பார். அதன் தாக்கத்தினாலே ஓநாய் டாட்டூவை வரைந்தேன். ஓநாய் எந்த சர்கஸிலும் இருப்பதில்லை. அது தனித்துவத்துடன் இருக்கும்’ என நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

BCCI, TEAMINDIA, INDVWI, T20, NAVDEEP SAINI, TATTOOS, WOLF