முக்கிய விக்கெட்டை பறந்து கேட்ச் பிடித்து அசத்திய தோனி..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பறந்து கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி இன்று(27.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களும், கே.எல்.ராகுல் 48 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 46 ரன்களும் எடுத்தனர். கடந்த போட்டியில் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட தோனி இப்போட்டியில் 56 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் 34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் பும்ரா வீசிய 27 -வது ஓவரில் மேற்கிந்திய வீரர் ப்ராத்வொய்ட் அடித்த பந்தை தோனி பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Specially for Indian Dhoni's hater on their face😂 pic.twitter.com/LScxTEq6Ie
— The_Living_Legend (@zoro_Thehero) June 27, 2019