‘இனி பவுலரும் ஹெல்மெட் போடணும் போல’.. தீபக் சஹரின் தலையை குறி வைத்த பந்து.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவாட்சனின் அதிரடி ஆட்டததால் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றி, 3-ல் தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக பெங்களூரில் நடந்த ராயல் சேல்ஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.
இந்நிலையில் இன்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணியுடன் சென்னை மோதின.இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
இதில் தொடக்க ஆட்டக்காரார ஜானி பேர்ஸ்ட்டோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னர் 57 ரன்கள் எடுத்திருந்த போது தோனியின் ஸ்டெம்பிங்கில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 19.5 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 96 ரன்களும், ரெய்னா 38 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் 5 -வது ஓவரை தீபக் சஹர் வீசினார். அப்போது ஹைதராபாத் வீரர் மனிஷ் பாண்டே அடுத்த பந்து தீபக் சஹரின் தலையில் விழுவது போல் சென்றது.
WATCH: Save your head! Pandey on the prowl
— IndianPremierLeague (@IPL) April 23, 2019
Full video here 📽️📽️https://t.co/sw91XN1XP9 #CSKvSRH pic.twitter.com/OJs9LpGrBU