‘பேன்ட்டு கழண்டா என்ன, நமக்கு விக்கெட் தான் முக்கியம்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கின் போது வீரர் ஒருவரின் பேன்ட் கழண்டுபோன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘பேன்ட்டு கழண்டா என்ன, நமக்கு விக்கெட் தான் முக்கியம்’.. வைரலாகும் வீடியோ..!

ஆஸ்திரேலியாவில் மார்ஸ் கப் என்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் க்யூன்ஸ்லேண்ட் மற்றும் விக்டோரியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த க்யூன்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த விக்டோரியா அணி 39.5 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 154 ரன்கள் வித்தியாசத்தில் க்யூன்ஸ்லேண்ட் அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் 29 ஓவரின்போது விக்டோரியா அணி வீரர் அருகில் அடித்துவிட்டு சிங்கில் ஓட முயற்சித்தார். உடனே அந்த பந்தை பிடிக்க முயற்சித்த க்யூன்ஸ்லேண்ட் அணி வீரர் மார்கஸ் லபுஷேனேவின் பேன்ட் கழன்றுவிட்டது.  ஆனாலும் சாதூர்யமாக பந்தை கீப்பரிடம் வீசி அவுட்டாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No pants, no worries for @marnus3 with this cheeky #MarshCup run-out 🤭

A post shared by cricket.com.au (@cricketcomau) on

MARNUSLABUSCHAGNE, HILARIOUS, RUNOUT, PANT, VIRALVIDEOS