‘ஹாப்பி பர்த்டே அஸ்வின்’.. பிசிசிஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று(17.09.2019) தனது 33 -வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனால் விளையாட்டு வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011 -ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார்.அப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 3 விக்கெட்டுகளும், 2 -வது இன்னிங்ஸ்ஸில் 6 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். மேலும் அந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இதன்மூலம் அறிமுக தொடரிலே ஆட்ட நாயகன் விருது வென்ற 3 -வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 342 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100, 200, 300 -வது விக்கெட்டுகளை எடுத்த வீடியோவை வெளியிட்டு பிசிசிஐ அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Test wicket No. 100 ✅
Test wicket No. 200 ✅
Test wicket No. 300 ✅
Happy Birthday @ashwinravi99 🎉🎉 #TeamIndia pic.twitter.com/7xJB4JQ8Bz
— BCCI (@BCCI) September 17, 2019