'என்னடா, சோடா தெளிச்சு தெளிச்சு அடிக்குறீங்க'... 'டிம் பெயினை வச்சு செய்யும் மீம்ஸ்'... கொளுத்திபோட்ட இந்திய கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி, டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று திரும்பியிருந்தது.

'என்னடா, சோடா தெளிச்சு தெளிச்சு அடிக்குறீங்க'... 'டிம் பெயினை வச்சு செய்யும் மீம்ஸ்'... கொளுத்திபோட்ட இந்திய கிரிக்கெட் பிரபலம்!

முன்னணி வீரர்கள் யாருமில்லாத இந்திய அணி, இளம் வீரர்களைக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு சாதனை படைத்திருந்தது.

அதிலும், கடைசி டெஸ்ட் போட்டி நடந்த கப்பா மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவை எந்த அணியும் வீழ்த்தியதில்லை. அந்த வரலாற்றையும் இந்திய அணி மாற்றி எழுதியது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்த போட்டியின் இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், அஸ்வினிடம், அடுத்த போட்டியில் கப்பா மைதானத்தில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் எனக்கூறி, நெருக்கடியை ஏற்படுத்த முயன்றார். ஆனால், அஸ்வினோ மிகவும் நிதானமாக பதிலடி கருத்தை தெரிவித்திருந்தார்.

கப்பா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறாது என்பதைத் தான் டிம் பெயின் அப்படி குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதையும் தாண்டி இந்திய அணி வெற்றி கண்டிருந்த நிலையில், டிம் பெயினை இந்திய ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்திருந்தனர். டிம் பெயின் தொடர்பான பல மீம்ஸ்களும் வைரலாகியிருந்தது.

ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்து இன்று இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பித்த போதும் டிம் பெயினை மீண்டும் கலாய்த்து சீண்டியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டிம் பெயின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுடன் பேசும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதில் 'போட்டி இந்தியாவின் பக்கம் இருப்பது போல தோன்றினால், லார்ட்ஸ் மைதானத்தில் உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன்' என இந்திய அணி வீரர்களிடம் கூறுங்கள்' என டிம் பெயின், ஜோ ரூட்டுக்கு ஆலோசனை வழங்குவது போல கருத்து இடம்பெற்றுள்ளது.

 

ஆஸ்திரேலிய தொடர்  முடிந்து பல நாட்களான பின்பும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினின் செயல் மூலம் அவரை தொடர்ந்து சீண்டி மீம்ஸ்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்