"இது தரமான பதிலடி..." ரோஹித்தை 'கிண்டல்' செய்த பிராட் ஹாகை... ஒரே ஒரு 'மீம்' வைத்தே செஞ்சு விட்ட இந்திய முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலாவதாக 3 ஒரு நாள் போட்டி, அதன் பின்னர் 3 டி 20 போட்டி மற்றும் கடைசியாக 4 டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ளது.
இதில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளப் போகும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பவுள்ளார்.
இதனால் விராட் கோலிக்கு பதிலாக 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை யார் கேப்டனாக வழி நடத்துவார் என்ற கேள்வி எழுந்தது. இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரஹானே இருந்தாலும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் ரோஹித் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்து வருகின்றனர்.
Rahane will do a fine job. The only other option would be Rohit but his record touring in Test Cricket provides no certainty of him holding a spot in the team. #Cricket #INDvAUS https://t.co/7sPXlw1PB5
— Brad Hogg (@Brad_Hogg) November 16, 2020
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், தனது ட்வீட் ஒன்றில், ரஹானே இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்துவார் என்றும், ரோஹித் சிறந்த கேப்டனாக இருந்தாலும் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் டெஸ்ட் போட்டியில் அவரது சராசரியை வைத்து அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம் தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Clever. https://t.co/26q8GJhVH6
— Brad Hogg (@Brad_Hogg) November 20, 2020
இதன் காரணமாக, ரோஹித் ரசிகர்கள் ஹாக் பதிவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஹாக் ரோஹித் ரசிகர்களை கிண்டல் செய்வது போன்ற மீம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இதனால் ரோஹித் ரசிகர்கள் இன்னும் அதிகம் கடுப்பான நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ரோஹித்திற்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை என சொன்ன ஹாக் ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"No certainty of him (Rohit) holding a spot in the team"😂#AusvInd https://t.co/qrmX56CUCa pic.twitter.com/ALzyXfFk1C
— Wasim Jaffer (@WasimJaffer14) November 20, 2020
ஜாஃபரின் இந்த ட்வீட் ரோஹித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்