‘என் ஒரே ஆசை அது ஒன்னுதான்’!.. சல்மான் கானின் பழைய ட்வீட்டை மேற்கோள் காட்டி பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதிவிட்ட உருக்கமான ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பழைய ட்வீட்டை மேற்கோள் காட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்று பெற்றது.
இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று (12.04.2021) மும்பை வான்கடே மைதானத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் அணியும் பேட்டிங் பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான வாசிம் ஜாபர், பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2014-ம் ஆண்டு பதிவிட்ட ‘ஜிந்தா டீம் வின் பண்ணிருச்சா?’ என கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்ட பழைய ட்வீட்டை மேற்கொள் காட்டி ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
Our campaign starts today. My only wish is that I get to quote tweet this Salman Khan tweet with 'Yes' more often this season 😉 #RRvsPBKS #IPL2021 pic.twitter.com/v2A0oeTGrS
— Wasim Jaffer (@WasimJaffer14) April 12, 2021
அதில், ‘எங்கள் ஆட்டம் இன்று தொடங்குகிறது. எனது ஒரே ஆசை என்னவென்றால், இந்த சீசனில் இந்த சல்மான் கான் ட்வீட்டுக்கு “ஆம்” என பதிலளிக்க வேண்டும்’ என வாசிம் ஜாபர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்